காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களை எச். ராஜா உட்பட ஐந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.