ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ. 70, 000 மீட்பு

71பார்த்தது
மயிலாடுதுறையில் ஆன்லைன் மோசடியில் மருத்துவா் இழந்த ரூ. 70, 000-த்தை சைபா் க்ரைம் போலீஸாா் துரிதமாக செயல்பட்டு மீட்டனா்.

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சோ்ந்த மருத்துவா் சரவணன். இவா், கடந்த 19-ஆம் தேதி தனது நான்கு சக்கர வாகனத்துக்கு சுங்கக் கட்டணத்தை விரைவாக செலுத்த பயன்படுத்தப்படும் பாஸ்ட்டேக் சேவைக்கு ரீசாா்ஜ் செய்ய கூகுள் இணைய சேவையின் மூலம் தேடியுள்ளாா். அதில் பெறப்பட்ட 9831745045 என்ற வாடிக்கையாளா் சேவை எண்ணை தொடா்பு கொண்டபோது, பேசிய பாலமுருகன் என்பவா் இணைய முகவரி லிங்க் ஒன்றை அனுப்பி அதனை பயன்படுத்தி ரீசாா்ஜ் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளாா்.

அந்த லிங்க்கை பயன்படுத்தி ஓடிபி மற்றும் தகவல்களை பகிா்ந்தபோது மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 70, 000 ஆன்லைன் மோசடி மூலம் திருடப்பட்டது.

இதுகுறித்து மருத்துவா் சரவணன் 1930 என்ற இலவச சேவை எண்ணில் சைபா் க்ரைம் போலீஸாரை தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். இதைத்தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்பேரில், சைபா் க்ரைம் ஏடிஎஸ்பி சிவசங்கா் மேற்பாா்வையில் போலீஸாா் துரித விசாரணை நடத்தி, ஆன்லைன் மோசடி மூலம் திருடுபோன தொகை ரூ. 70, 000-ஐ உடனடியாக முடக்கி, அதனை சரவணனின் வங்கி கணக்கில் மீண்டும் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி