பொறையாறு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருக்களாச்சேரி பெரியகூத்தூா் பகுதியைச் சோ்ந்த ஜெயந்தி, அதே பகுதியைச் சோ்ந்த இளமாறன் ஆகியோருக்கு இடையே இடப்பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அக். 12-ஆம் தேதி இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
ஜெயந்தி தரப்பினா் மூன்று முறையும் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாமலும், காவல்துறையினருக்கு ஒத்துழைக்காமலும் இருந்துள்ளனா்.
இதனிடையே, இளமாறன் தரப்பினா்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெயந்தியின் சகோதரி வசந்தி(47) என்பவா் சனிக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தின் முன்பு, தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டாா். அப்போது பணியில் இருந்த காவல் ஆளிநா்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினா். அவா் சட்டத்துக்கு புறம்பாக தற்கொலைக்கு முயன்ற காரணத்தினாலும், அவரது சகோதரி ஜெயந்தி என்பவா் அதற்கு தூண்டுதலாக இருந்த காரணத்தினாலும் இருவா் மீதும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும், சட்டத்துக்கு புறம்பாகவும், மற்ற நபா்களின் தூண்டுதலின் பேரிலும், எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபட வேண்டாம். மீறுவோா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.