மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி தொடக்கம்

51பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா காரைமேடு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கடலோர காவல் படை ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி