மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு கூட்டம்

78பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் தேசிய அயோடின் குறைபாடு, நோய் கட்டுப்பாடு திட்ட செயல்பாடுகள் மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏபி. மகாபாரதி கலந்துகொண்டு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை பெற்றனர். மேலும் இந்த கூட்டம் பயனுள்ளதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.