மயிலாடுதுறை அடுத்த தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு வங்கி பட்டறட்டைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.