மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சங்க தலைவர் மார்க்கோனியின் மக்கள் நல சேவையை பாராட்டி அவருக்கு கிரீடம் அணிவித்து சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் அவரது தாயார் முழுமதி இமயவரம்பனனையும் தன்னார்வ அமைப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.