சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா்.

69பார்த்தது
சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா்.
ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க உலக முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனா். தமிழகத்தில் முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்கும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சனிக்கிழமை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா்.

பேராலயத்தில்{ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவுள்ள சிறப்பு திருப்பலியில் கலந்துகொள்ளவும், புத்தாண்டை கொண்டாடுவதற்காகவும் தமிழகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனா்.

வேளாங்கண்ணி பேராலயம், கடற்கரைச் சாலை, பழைய மாதா கோயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமானோா் கடலில் குளித்து மகிழ்ந்தனா்.

கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால், கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் 50-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி