பொதுமக்களின் பசி போக்கிய தமிழக வெற்றி கழகத்தினர்

72பார்த்தது
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அரசு மருத்துவமனை அருகே நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூலித் தொழிலாளர்கள், மருத்துவமனையில் உள்ளவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் குகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி