நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா சிக்கல் கோவிலில் உள்ள முருகன் சிங்கார வேலருக்கு ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு பால், சந்தனம் மற்றும் பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் ஆடி மாத கிருத்திகை முன்னிட்டு கோவிலில் உள்ள பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.