நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் படியும், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் அறிவுறுத்தலின் பேரிலும் சிறப்பு தூய்மை பணி தொடங்கி நடைப்பெற்றது. இதில் திருமருகல் ஊராட்சி மன்ற வளாகம், திருமருகல் பஸ் நிலையம், அண்ணாமலை நகர், அண்ணா பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள கருவேல மரங்கள், குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டதுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஊராட்சியை தூய்மையாக வைக்க பாடுபடுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பணியினை ஊராட்சி தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி செயலர் மணிமாறன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.