காவிரியில் தண்ணீர் திறக்க மறக்கும் கர்நாடகா அரசை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.