பாஜகவினரை கைது செய்த போலீசார்

1087பார்த்தது
மயிலாடுதுறையில் கள்ளக்குறிச்சி சாராயத்திற்கு எதிராக நேற்று போராட்டம் நடத்த வந்த பாஜகவினருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கு முன்பே அங்கு வந்த பாஜகவினரை ஒருவர் பின் ஒருவராக போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க வரதராஜன், நகர தலைவர் வினோத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி