2018-60 50%, 100%, 200% என சொத்து வரிகளை உயர்த்தியது அதிமுக, ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு 25%, 50%, 100% என்ற அளவில் போடுங்கள் என முதலமைச்சர் அறிவுறுத்தினார். மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்காகவே வரி உயர்த்தப்பட்டது என்று ஏற்கனவே அரசு விளக்கம் அளித்துள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு என்பது மிகவும் குறைவாக உள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.