மின்சாரம் தாக்கி திருமணமான பெண் பலி

53பார்த்தது
கீழ்வேளூர் அருகே ஒக்கூரில் மின்சாரம் தாக்கியதில் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த ஒக்கூர் மேல தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி அனிதா(24). இவர் தனது வீட்டில், மின் விளக்கை மாற்றும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளம் பெண்ணை மீட்ட உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கே சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்தி