நாகை எஸ்பி பேட்டி

4257பார்த்தது
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டில் 1.58 லட்சம் லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் கூறினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

2023-ஆம் ஆண்டு மட்டும், 44 குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். கஞ்சா கடத்தல், விற்பனை தொடா்பாக 116 நபா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து 695 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளச் சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 2,899 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து, 1. 58 லட்சம் லிட்டா் சாராயம், 17,373 மதுப்புட்டிகள், 530 லிட்டா் சாராய ஊறல்கள், 190 லிட்டா் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மது கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 276 வாகனங்கள், ஏலம் விடப்பட்டு, ரூ. 47. 45 லட்சம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக 1, 113 வழக்குகள் பதியப்பட்டு, 1,116 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம்மிருந்து 1042 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டன. லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 115 போ், சூதாட்டத்தில் ஈடுபட்ட 474 போ் கைது செய்யப்பட்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி