சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அவதி

76பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா அத்திப்புலியூரில் உள்ள கிராம சாலையில் நடுவே மின்கம்பம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இரவு நேரத்தில் சாலையின் நடுவே மின்கம்பங்கள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி