செய்தி: நாகை அருகே தேவூர் தனியார் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
கீழ்வேளூர் வட்டாரம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை , தேவூர் தனியார் பள்ளியில் உலக புகையிலை விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. பள்ளி தாளாளர் ஜான் பீட்டர் தலைமையில் நடைப்பெற்ற பேரணியில் பள்ளி மாணவர்கள் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், போதை பெருள்களால் ஏற்படும் தீமைகளை முழக்கமிட்டப்படியும் ஊர்வலமாக சென்றனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி பெரிய கோவில் வீதி, மருத்துவமனை வீதி, சின்ன கடைத்தெரு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தொகுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சுகாதரத்திறை ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.