பக்தா்கள் சுவாமி தரிசனம்

64பார்த்தது
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, முருகனின் ஆதிப்படை வீடான எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. காலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அா்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனா்.

வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு பால், பன்னீா் , சந்தனம், மஞ்சள் பொடி பால் தயிா், திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி