வில்லனை நிராகரித்து.. ஹீரோவை கரம்பிடித்த நடிகை

80பார்த்தது
வில்லனை நிராகரித்து.. ஹீரோவை கரம்பிடித்த நடிகை
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா நடிகையாக வலம் வந்த அமலா கடந்த 1992-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து கரம்பிடித்தார். இதற்கு முன்னதாக வில்லன் நடிகர் ஒருவரின் காதலை நிராகரித்துள்ளார் அமலா. அந்த நடிகர் வேறுயாருமில்லை, 90ஸில் டாப் வில்லனாக வலம் வந்த ரகுவரன் தான். கூட்டுப்புழுக்கள் என்ற படத்தில் நடித்தபோது ரகுவரன், அமலா மீது காதலில் விழுந்துள்ளார். அதை அவரிடம் சொன்னபோது அமலா நோ சொல்லிவிட்டாராம். இதனால் தான் மிகுந்த மனவேதனை அடைந்ததாக பேட்டி ஒன்றில் ரகுவரன் கூறியுள்ளார். இதனையடுத்துதான் இரண்டாம் தாரமாக நாகர்ஜூனாவை அமலா திருமணம் செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி