திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மனு அளித்திருக்கிறார். “வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ரூ.4.5 கோடி எடுத்துச் சென்ற நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் பிடிபட்டதை சுட்டி காட்டிய அவர், நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்கள், அவரது உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என அனைவரின் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.