எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீட்டில் மீண்டும் சோதனை

50பார்த்தது
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீட்டில் மீண்டும் சோதனை
கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் கவின் வீட்டில் மீண்டும் சிபிசிஐடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டாங்கோயில் மேற்கு, அம்மன் நகரில் உள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கவின் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.100 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் கவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி