சரத்குமாருக்கு எம்.பி சீட் ரெடி?

69பார்த்தது
சரத்குமாருக்கு எம்.பி சீட் ரெடி?
பாஜகவோட கூட்டணியாக இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியிருந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனது கட்சியை பாஜகவோடு இணைத்துள்ளார். இணைப்பு மேடையில் பேசிய அவர், இது கட்சியின் முடிவு அல்ல, மக்களுக்கான முடிவு என கூறியுள்ளார். அவரையடுத்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரத்குமாரை தமிழகத்தில் அடைத்து வைக்கமாட்டோம். அவர் தேசியத்திற்கு தேவைப்படுகிறார் என கூறியுள்ளார். இதன் மூலம் சரத்குமாருக்கு எம்.பி சீட் ரெடி என அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி