2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அம்மாவின் கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி மூடுவிழா நடத்தப் போவது உறுதி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுக ஒன்றிணைவதை தடுப்பது யார் என்று அனைவருக்கும் தெரியும். இபிஎஸ் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. இது தொடர்ந்தால் 2026 தேர்தலிலும் இபிஎஸ்க்கு தோல்வி உறுதி என்று தெரிவித்துள்ளார்.