மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஃபெரோஸ் நியாஸ் ஷேக் என்பவர் பெண்களை நம்பவைத்து திருமணம் செய்து அவர்களது நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை அபகரித்து வந்துள்ளார். இறுதியாக, நல்லா சோபாராவைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நபர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உ.பி., டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது.