தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும் என தந்தி டிவி கடந்த மே மாதம் முதல் 7 முறை கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த 7 முறையும் காங்கிரசின் ராகுல் காந்தியே வெற்றி பெற்றுள்ளார். இந்த 7 மாதத்தில் ராகுல் காந்திக்கான ஆதரவு விவரம், மே 69% ஜூன் 70% ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் 71% அக்டோபர் 70% நவம்பர் 68%. மேலும் இந்த 7 மாதங்களில்
பிரதமர் மோடிக்கான ஆதரவு விவரம், மே 29% ஜூன் 30% ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் 29% அக்டோபர் 28% நவம்பர் 28%. மொத்தம் 40 தொகுதிகளில் இந்த கருத்துக்கணிப்பானது எடுக்கப்பட்டுள்ளது.