ரூ.7 கோடிக்கு ஏலம் விடப்பட்ட மொபைல் எண்

57பார்த்தது
ரூ.7 கோடிக்கு ஏலம் விடப்பட்ட மொபைல் எண்
உலகப் புகழ் பெற்றவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்படும் செய்திகளை ஆர்வத்துடன் நாம் பார்த்திருப்போம். அதேபோல லட்சங்கள், கோடிகள் செலவு செய்து ஏலத்தில் கார் எண்களை வாங்குபவர்களும் உண்டு. சிறப்பு ஃபோன் எண்கள் மற்றும் கார் எண்களையும் பலர் வாங்குகின்றனர்.

தற்போது ரூ.7 கோடி கொடுத்து மொபைல் எண் வாங்கிய சம்பவமும் நடந்துள்ளது. துபாயில் நடந்த ஏலத்தில் 058-7777777 என்ற எண் சுமார் ரூ.7 கோடிக்கு (3.2 மில்லியன் திர்ஹம்) விற்கப்பட்டது. 7 தொடர்களைக் கொண்ட 058-7777777 என்ற எண் அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி