தடகள வீராங்கனைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

72பார்த்தது
தடகள வீராங்கனைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை நௌஷீன் பானுசந்த், 71வது டென்சிங் ஹிலாரி மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச மாரத்தான் போட்டியில் பங்கேற்று 42 கிலோமீட்டர் தூரத்தை 10 மணிநேரம் 30 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் மூலம் நிதியுதவி பெற்று இப்போட்டியில் பங்கேற்ற நெளஷீன் பானுசந்த், வெற்றிக்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை கோவை வந்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி