முன்னாள் மாடல் அழகி கொலை - சிசிடிவி காட்சிகள்

65831பார்த்தது
முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். செவ்வாய்க்கிழமை ஹோட்டல் அறையில் இருந்து அவரது உடலை இரண்டு பேர் இழுத்துச் செல்லும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. போலீசார் இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். திவ்யா 2016ஆம் ஆண்டு போலி போலீஸ் என்கவுன்டரில் இறந்த கேங்க்ஸ்டர் சந்தீப் கடோலியின் முன்னாள் காதலி ஆவார். இந்த வழக்கில் காவல்துறைக்கு ஆதரவாக முக்கிய சாட்சியாக இருந்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். 2023ல் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

தொடர்புடைய செய்தி