பாஜகவில் இணையுமாறு அமைச்சருக்கு மிரட்டல்

77பார்த்தது
பாஜகவில் இணையுமாறு அமைச்சருக்கு மிரட்டல்
அரசியல் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள வேண்டுமானால் பாஜகவில் இணையுமாறு தன்னை நிர்பந்தித்ததாக டெல்லி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தங்கள் கட்சியில் வந்து இணையுமாறு பாஜக என்னை அணுகியது. பாஜகவில் இணையாவிட்டால் அடுத்த ஒரு மாதத்தில் அமலாக்கத்துறையால் நான் கைது செய்யப்படலாம். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே நான் உட்பட 4 ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படலாம்” என்ற அதிர்ச்சித் தகவலை கூறினார்.

தொடர்புடைய செய்தி