தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது ‘X’ தளத்தில், "தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டமான #GreenTN-ன் ஒரு பகுதியாக பசுமை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்துறை வளர்ச்சியை கொண்டு வர முயற்சியை தொடங்கியுள்ளோம். இன்று ஒரே நாளில் 21 சிப்காட் தொழில் பூங்காக்களில் 1 லட்சம் மரங்களை நட்டுள்ளோம். தொழில் வளர்ச்சி என்பது வேலை வாய்ப்புகள் உருவாக்குவது மட்டுமல்ல, சுற்றுச்சூழல் உணர்வுடன் முன்னேற்றம் ஏற்படுவதை உறுதி செய்வதும் தான்" என குறிப்பிட்டுள்ளார்.