அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்பினார்!

80பார்த்தது
அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்பினார்!
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, திமுக எம்எல்ஏவும், மருத்துவருமான எழிலன் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலுதவி செய்தார். அதன்பின், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது வீடு திரும்பி உள்ளார்.

தொடர்புடைய செய்தி