கீழடியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழர்களின் தாய்மடியாம் கீழடியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 145ஆவது ஆய்வை மேற்கொண்டோம். மானமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இப்பள்ளி குழந்தைகளின் வாசிப்புத் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் மேம்பாட்டிற்குத் தேவையான கோரிக்கைகளையும் கேட்டறிந்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.