மேட்டூர் அணைக்கான நீர் வரத்து மும்மடங்காக அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூரை வந்தடைந்தது. இதையடுத்து, இன்று காலை, விநாடிக்கு 5,054 கன அடியாக இருந்த நீர் வரத்து, தற்போது 16,577 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.