மதுரை, கோவையில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை!

52பார்த்தது
மதுரை, கோவையில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை!
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு செய்ய உள்ளனர். மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்க உள்ளதை அடுத்து நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோவையில் உக்கடம் முதல் கோவை விமான நிலையம் வரை 20.4 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமையவுள்ளது.

தொடர்புடைய செய்தி