சாதனை புரிந்த மாணவ, மாணவிகள் - எம்.பி., பாராட்டு

72பார்த்தது
சாதனை புரிந்த மாணவ, மாணவிகள் - எம்.பி., பாராட்டு
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிகளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் சாரா, தியான் பாயிண்ட், நிகில் பாயிண்ட் ஆகியோர் 2 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து, அவரது எக்ஸ் வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். மதுரை மாவட்ட மாணவ, மாணவிகள் ஏதேனும் சாதனை புரிந்தால் அவர்களை அழைத்து பாராட்டுவதை சு.வெங்கடேசன் வழக்கமாக கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி