மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை

83பார்த்தது
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எலும்பு முறிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்யபட உள்ளதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள நேற்று (மே 25) வைகோ சென்றுள்ளார். அப்போது நெல்லை வீட்டில் வைத்து கால் இடறி கீழே விழுந்ததில் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அருவுறுத்தியதாக துரை வைகோ கூறியுள்ளார். சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலம்பெறுவார் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி