மனோரமாவுக்கு வெளிநாட்டில் நடந்த சுவாரசிய சம்பவம்

69பார்த்தது
மனோரமாவுக்கு வெளிநாட்டில் நடந்த சுவாரசிய சம்பவம்
மனோரமா குறித்த நினைவலைகளை அவரின் தோழியும், நடிகையுமான சச்சு பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறும் போது, “சிங்கப்பூருக்கு கலை நிகழ்ச்சிக்காக சென்ற போது கடையில் மேக்கப் சாதனங்களை ஒரு சைனாகாரன் கடையில் வாங்கச் சென்றோம்.. அப்போது கடைக்காரருக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து “சச்சு பேரம் பேசி வாங்கணும் .. விலை அதிகமாக சொல்வார்கள்” என என்னிடம் மனோரமா கூற... கடைக்காரரோ மேடம் நாங்க அப்படியெல்லாம் அநியாயமாக விலை வைத்து விற்க மாட்டோம்... என்று அழகாய் தமிழில் பேசினாரே பார்க்கலாம் நாங்கள் அசந்து விட்டோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி