2025-2026ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பள்ளிக் கல்வித்துறைக்கு சுமார் ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் காலை உணவு திட்டத்தை நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவுபடுத்துவதற்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.