"சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்படை நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்திருப்பது அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை. ஒக்கி புயலால் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்தபோது வராத வான்படை, குரங்கணி காட்டுத் தீவிபத்தில் மாட்டிக்கொண்டவர்களை மீட்க வராத உலங்கு ஊர்திகள், கடற்கரையில் வேடிக்கை காட்டுவதன் மூலம் தமிழினத்திற்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன?” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.