சேலத்தில் மாம்பழம் விலை கிடுகிடு உயர்வு

60பார்த்தது
சேலத்தில் மாம்பழம் விலை கிடுகிடு உயர்வு
தித்திக்கும் சேலத்து மாம்பழங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மல்கோவா, அல்போன்சா, இமாம் பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாளை ஆகிய ரகங்கள் சேலம் மாவட்டத்தில் விளையும் மாங்கனிகள் ஆகும்.

தற்போது கடும் வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக மாம்பழ அறுவடை இந்த வருடம் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாம்பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.60 வரை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ மாம்பழம் ரகத்தை பொறுத்து ரூ.180 முதல் ரூ.240 வரை விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி