91.17% சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி

80பார்த்தது
91.17% சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி
தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியிடப்பட்டுள்ளது. இதில், 91.17% சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,11,172 மாணாக்கர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 4,04,143 (94.69%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,35,396 (87.26%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 7.43% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச் 2023ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,76,844. தேர்ச்சி பெற்றோர் 7,06,413. தேர்ச்சி சதவிகிதம் 90.93% ஆக இருந்தது.

தொடர்புடைய செய்தி