கர்நாடகாவில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இவர் தமிழ்நாட்டின் ஓசூரில் 2 வீடுகளில் கொள்ளையடித்த நிலையில் போலீசாரிடம் பிடிபட்டார். இதன்போது தப்பியோட முயன்ற அபுபக்கருக்கு கால்முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாவுக்கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.