சென்னை அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பி மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய மகாவிஷ்ணுவின் வீடியோ, அவரது பரம்பொருள் அறக்கட்டளை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய வீடியோக்கள் வைரலாகி பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (செப்.9) சமர்ப்பிக்கப்படுகிறது.