மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 21) சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில்
இயங்கும் நான்கு இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில்
அமைந்திருக்கும் இறைச்சிக் கடைகளும் மூட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் இறைச்சி, மீன்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.