மதுரை: நீரில் மூழ்கிய ஊராட்சி மன்றத் தலைவர் பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை ஊராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன் (33) என்பவர் மதுரை மாவட்டம் வாலாந்துார் வீரபாண்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து நேற்று (நவ. 3) கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் படியில் நின்று குளித்தவர் திடீரென அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். இது தொடர்பாக வாலாந்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.