உசிலம்பட்டியில் பிப்ரவரியில் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி.

582பார்த்தது
உசிலம்பட்டியில் பிப்ரவரியில் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி.
மதுரை உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவுடன் சேர்த்து பிப்ரவரி 12ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என விழா முடிவு செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள தொட்டப்பநாயக்கணூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். , இந்த கோவிலின் புரணமைப்பு பணிகளுடன் பழமை மாறாமல் ஆதி வழக்கப்படி நடத்தப்பட்டு வரும் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் மற்றும் பார்வையாளர் மேடைக்கான பணிகள் நடந்தன.

இந்நிலையில் கும்பாபிஷேக விழா நடத்துவது மற்றும் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்துவது தொடர்பாக புத்தூர் நாட்டைச் சேர்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் எல்லைக்குட்பட்ட நல்லுத்தேவன்பட்டி, பூச்சிபட்டி, இ. புதுப்பட்டி, மாலைப்பட்டி, செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கணூர் உள்ளிட்ட 50க்கும் கிராமங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன், தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் வாரிசுதார்கள் இணைந்து நடந்த ஆலோசனை கூட்டத்தின்படி ஜக்கம்மாள் கோவிலில் வரும் பிப்ரவரி 10, 11 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது , அடுத்த நாளான பிப்ரவரி 12ஆம் தேதி ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து அரசின் ஒத்துழைப்புடன் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

டேக்ஸ் :