மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்தவர் பலத்த காயமைடைந்து உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள ஆரியப் பட்டி ஏ. கன்னியம்பட்டியைச் சேர்ந்த விவசாயி முத்துக்காமன் (44) என்பவர் நேற்று முன்தினம் இரவு ஏ. கன்னியம்பட்டி மயானம் அருகேயுள்ள ஆற்றுப் பாலத்தில் மது போதையில் அமர்ந்திருந்தார்.
அப்போது நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்தார்.
அவரை, அந்தப் பகுதியினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்குப் பின்னர், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.