உசிலம்பட்டியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட டி. எஸ். பி.

1895பார்த்தது
உசிலம்பட்டியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட டி. எஸ். பி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் போலீசார் பயன்படுத்தும் உபகரணங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல்ம் நிலையம், அனைத்து மகளீர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் உத்தப்பநாயக்கணூர், எழுமலை, செக்காணூரணி என சுமார் 11 காவல் நிலையங்களில் பணியாற்றும் 155 காவலர்களுக்கு வருடாந்திர உடற் தகுதி மற்றும் அவர்கள் பயன்படுத்தும் தளவாட பொருட்கள் குறித்து ஆய்வு முகாம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. , இந்த முகாமில் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த், செக்காணூரணி காவல் ஆய்வாளர் திலகராணி உள்ளிட்டோர் காவலர்கள் பயன்படுத்தும் சீருடை, லத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்தனர். , தொடர்ந்து தளவாட பொருட்களை சிறப்பாக பராமரித்து வரும் காவலர்களுக்கு உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு பரிசு வழங்கி பாராட்டினர். ,

தொடர்புடைய செய்தி