உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்.

62பார்த்தது
உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்.
மதுரை உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவி மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கொக்குளம் அருகே உள்ள கண்ணணூர் கிராமத்தை சேர்ந்த ராமுவின் மகள் ஜீவிதா (22) என்பவர் மதுரை SVN கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி. ஏ தமிழ் படிப்பை படித்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தந்தை செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி